கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் வைக்க முயற்சி செஞ்சு பாருங்க, அப்புறம் இருக்கு - தி.மு.க'வை மிரட்டும் அர்ஜுன் சம்பத்

'தி.மு.க கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்கும் என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-27 09:04 GMT

'தி.மு.க கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்கும் என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுதந்திர தின 75'வது அமுத ஆண்டு விழாவை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாக வரலாற்றை போற்றும் வகையில் அவர்களை நினைவிடங்களுக்கு மரியாதை செலுத்தும் 'வந்தே மாதரம்' ஜூலை 15ஆம் தேதி வேலூரில் துவங்கியது. நேற்று அந்த யாத்திரையின் ஒரு பகுதியாக விருதுநகர் காமராஜர் இல்லத்தில் மாலை அணிவித்து செய்தியாளர்களை சந்தித்தார் அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்.

அப்போது அவர் பேசியதாவது, 'ஒன்றியமல்ல இந்தியா! திராவிடமல்ல தேசியம்!' இந்த குறிக்கோளுடன் 'இல்லந்தோறும் தேசியக்கொடி' உள்ளம் தோறும் தேச பக்தி என்ற அடிப்படையில் இந்த யாத்திரை நடக்கிறது, ஈ.வே.ராமசாமி திராவிட இயக்கத்தினால் தான் காமராஜர் முதல்வர் ஆனார் என்று அவரின் வரலாற்றை திருத்தி கூறுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

சிவகாசி பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும், மாநில அரசு நடவடிக்கை என்றும் சதுரகிரி மகாலிங்கம் சுவாமி கோவில் அன்னதானம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது அதனை திரும்ப பெற வேண்டும்.

சபாநாயகர் அப்பாவுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தான் தமிழர்கள் ஆட்சி காரணம் எனக் கூறுவது கண்டனத்திற்குரியது, மேலும் கருணாநிதி க்கு பேனா நினைவு தினம் நியமிக்க முயன்றால் இந்து மக்கள் கட்சி போராட்டத்தில் இறங்கும்' என தெரிவித்தார்.


Source - Dinamalar

Similar News