கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்ற 35 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி இல்லை: தி.மு.க.வுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் நகைக்கடன் தள்ளுபடி இல்லை என்ற திமுக அரசின் முடிவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-29 09:38 GMT

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் நகைக்கடன் தள்ளுபடி இல்லை என்ற திமுக அரசின் முடிவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த சட்ட மன்ற தேர்தலின்போது கூட்டுறவு சங்களில் 5 சவரன் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றவர்களின் கடன்களை அரசு தள்ளுபடி செய்யும் என்று திமுக அறிக்கையாக கொடுத்திருந்தது. அதன்படி ஆட்சிக்கு வந்து கடந்த 7 மாதங்களுக்கும் மேல் ஆகிறது. ஆனால் இன்றுவரை நகைக்கடன் தள்ளுபடி செய்யாமல் உள்ளது.

இந்நிலையில், கூட்டுறவுத்துறை பதிவாளர் சண்முக சுந்தரம் கூடுதல் பதிவாளர், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் 48,84,726 நகைக் கடன் விவரங்களில் 35,37,693 விண்ணப்பங்கள் தகுதியில்லை என கண்டறியப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. திமுக அரசின் இந்த அறிவிப்புக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் நகைக்கடன் தள்ளுபடியில் திமுக அரசு மக்களை ஏமாற்றும் வகையில் செயல்படுவது கண்டனத்திற்குரியது.

எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அள்ளி தெளித்து அதிகாரத்திற்கு வந்துவிட்டு, இப்போது அதிலிருந்து தப்பிக்க காரணங்களைத் தேடுவது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். எனவே, பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டோருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என்ற புதிய உத்தரவை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், தி.மு.க என்றாலே தில்லுமுல்லு என்பதை தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை உணர்ந்து கொள்வார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy:The Hindu

Tags:    

Similar News