மிகப்பெரிய தலைவர்களை இழிவுப்படுத்தி பேசிய தீயசக்தி கருணாநிதியின் பேரன் உதயநிதி.. டிடிவி தினகரன் கண்டனம்.!

மிகப்பெரிய தலைவர்களை இழிவுப்படுத்தி பேசிய தீயசக்தி கருணாநிதியின் பேரன் உதயநிதி.. டிடிவி தினகரன் கண்டனம்.!

Update: 2021-01-07 13:21 GMT

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள தலைவர்களை மிகவும் கீழ்தரமான முறையில் பேசிய சம்பவத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி பேசும்போது, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுபிடி ஆட்சி செய்கிறார். அது மட்டுமின்றி அவர் சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை பிடித்தார். மேலும், டெட்பாடி என மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சனத்தை வைத்தார்.

அப்போது அங்கு இருந்தவர்கள் கை தட்டி சிரித்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்கள் மட்டுமின்றி ஊடகத்திலும் வெளியானது. இதற்கு பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பெருந்தலைவர் காமராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்தி பேசிய தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை மு.க.ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார். கண்ணியத்திற்கும் திமுகவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு இது இன்னொரு சாட்டி என பதிவிட்டுள்ளார்.

Similar News