அடுத்து சிவசேனாவை கைப்பற்ற போகிறது பா.ஜ.க - கதறும் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா சிவசேனாவை கைப்பற்ற சதி செய்து வருவதாக பா.ஜ.க மீது உத்தவ் தாக்ரே குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2022-07-05 13:22 GMT

மகாராஷ்டிரா சிவசேனாவை கைப்பற்ற சதி செய்து வருவதாக பா.ஜ.க மீது உத்தவ் தாக்ரே குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ள நிலையில் சிவேசனா தலைவரும், முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே சிவசேனா பவனில் நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பேசினார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது சட்டசபையை தன்னிச்சையாக நடத்துவது அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயல், சிவ சேனா கட்சியை முடிவுக்கு கொண்டுவர பா.ஜ.க சதி செய்கிறது இந்த விளையாட்டுகளை எல்லாம் விளையாடுவதற்கு பதிலாக அவர்களுக்கு தைரியம் இருந்தால் மாநிலத்தில் இடைக்கால தேர்தலில் நடத்த வேண்டும்' என்றார்.

மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் நகர்வுகள் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதா அல்லது அரசியலமைப்பு விதிகளை மீறப்பட்டதா என்பது குறித்து நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்' எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.


Source - Maalai Malar

Similar News