'உதயநிதி, சபரீசன், துர்கா இவங்கதான் வசூல் மும்மூர்த்திகள்' - கோவை ஆர்ப்பாட்ட கூட்டத்தில் அம்பலப்படுத்திய அ.தி.மு.க

'தி.மு.க'வில் வசூலிப்பதற்கு மும்மூர்த்திகள் இருக்கிறார்கள், உதயநிதி, சபரீசன், துர்கா ஆகியோரை தவிர வேற யாரும் சம்பாதிக்க முடியாது' என அ.தி.மு.க'வின் ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பேசியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-07-26 05:22 GMT

'தி.மு.க'வில் வசூலிப்பதற்கு மும்மூர்த்திகள் இருக்கிறார்கள், உதயநிதி, சபரீசன், துர்கா ஆகியோரை தவிர வேற யாரும் சம்பாதிக்க முடியாது' என அ.தி.மு.க'வின் ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பேசியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


மின் கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க சார்பில் கோவையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ பங்கேற்றார்.

அப்போது அவர் கூறியதாவது, 'அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டிகள் நாங்கள் 55 ரூபாய் தானே உயர்த்தி இருக்கிறோம் ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய் தானே சொல்கிறார். இவங்க 2 கோடி 2000 கோடி ரூபாய் அடிக்கிறவங்க, அவங்களுக்கு இரண்டு ரூபாய் கஷ்டம் தெரியாது தொழிலாளர்கள், பெண்களுக்குத்தான் 2 ரூபாய் என் அருமை தெரியும்' என்றார்.

மேலும் பேசிய அவர், 'ஓராண்டில் தி.மு.க அரசு 40 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறது எங்கள் ஆட்சியில் கடன் வாங்கி இருந்தாலும் நகரங்களுக்கே தேவையான திட்டங்களை கொண்டு வந்தோம் ஏதாவது ஊழல் இருந்ததா?


தி.மு.க'வில் வசூலிப்பதற்கு மும்மூர்த்திகள் இருக்கிறார்கள் சபரீசன், உதயநிதி, துர்கா இவர்களை தவிர வேற யாரும் சம்பாதிக்க முடியாது' இவ்வாறு அவர் பேசினார். அப்போது எம்.எல்.ஏ ஜெயராம் உட்பட்ட பலர் உடனிருந்தனர். 


Source - Dinamalar

Similar News