அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவின் கூட்டம் ! கூட்டத்தை கட் கட் அடித்த உதயநிதி !

சென்னை அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் பங்கேற்காமல் புறக்கணித்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.

Update: 2021-09-28 12:17 GMT

சென்னை அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் பங்கேற்காமல் புறக்கணித்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.

திமுக எம்.எல்.ஏ.வும் அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். இதனிடையே பல்கலைக்கழகங்களில் மாதம்தோறும் சிண்டிகேட் குழு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் முக்கியமான முடிவுகளை சிண்டிகேட் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு எடுப்பது வழக்கம்.  

இந்நிலையில், இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. இதில் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். இதன் பின்னணி குறித்து விசாரித்தில் தற்போது உள்ளாட்சி தேர்தல் பணிகள் நடைபெறுவதால் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

மாணவர்களின் எதிர்காலம் மற்றும் பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வரும் விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வது, புதிய விரிவுரையாளர் பணியிடங்களை ஏற்படுத்துவது போன்றவைகளுக்கு இதில் விவாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதல் கூட்டத்தை உதயநிதி புறக்கணித்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Source: News 18

Image Courtesy: Vikatan


Tags:    

Similar News