எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது - உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்;

twitter-grey
Update: 2021-08-07 23:45 GMT
எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது - உதயநிதி ஸ்டாலின்

"எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது" என தி.மு.க எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உதயநிதி, தயாநிதி மாறன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய உதயநிதி கூறியதாவது, "இந்த மருத்துவமனையில் கடந்த மே மாதம் ஏற்பட்ட தீவிபத்தில் துரிதமாக செயல்பட்டு எந்தவித பாதிப்பும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது தீ விபத்தின் போது குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவர்களைதான் தான் கடவுளாக பார்க்கிறேன். கொரோனா தொற்றின் இரண்டாம் தாக்கத்தை சிறப்பாக கையாண்டு மக்கள் சேவை செய்து வருகிறது தி.மு.க அரசு" என்று கூறினார்.


கடந்த சட்டமன்ற தேர்தலில் கையில் வேலுடன் உதயநிதியும், அவரது தந்தை ஸ்டாலினுன் கையில் வேலுடன் வாக்கு சேகரித்தது குறிப்பிடதக்கது.


Source - ஏஷியாநெட் நியூஸ்

Tags:    

Similar News