டிவி ஸ்டாண்ட் ஆன 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' மனுக்கள் அடங்கிய பெட்டி! எங்கே தெரியுமா?
'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் மனுக்கள் வாங்கி போடப்பட்ட பெட்டி, தற்போது டிவி வைக்கும் ஸ்டாண்ட்டாக மாறியுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, ஐ-பேக் கம்பெனியின் ஐடியாவில் தி.மு.க பல முன்னெடுப்புகளை மேற்கொண்டது. அதில் ஒன்றாக 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் மாவட்ட வாரியாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பொதுமக்கள் தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை ஒரு பெட்டியில் போட்டு பூட்டி, அதன் சாவியை ஸ்டாலின் தனது சட்டை பையில் வைத்து கொண்டார். திருப்பூரில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் அந்த நிகழ்ச்சி நடந்தது. மக்கள் அளித்த மனுக்கள் மேடையில் வைத்திருந்த பெட்டியில் போடப்பட்டன. ஸ்டாலினும் அதைப் பூட்டி சாவியை சட்டைப் பாக்கெட்டில் போட்டு கொண்டு சென்றார்.
அந்தப்பெட்டி தற்போது திருப்பூர் தி.மு.க மாவட்ட அலுவலகத்தில், டீவி வைக்கும் ஸ்டாண்ட்டாக மாறி விட்டது. ஆனால், அதில் போட்ட மனுக்கள் என்ன ஆனது என்பது குறித்து சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை.
Inputs From: Dinamalar