கேரள தங்க கடத்தல் வழக்கில் பல அதிர்ச்சி உண்மைகள் - அமைச்சர் ஜெய்சங்கர் சூசகம்

கேரள தங்க கடத்தல் வழக்கின் விசாரணையின் முடிவில் உண்மை நிச்சயம் வெளிவரும் என மத்திய வெளியுறவுத் துறையில் அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

Update: 2022-07-12 13:18 GMT

கேரள தங்க கடத்தல் வழக்கின் விசாரணையின் முடிவில் உண்மை நிச்சயம் வெளிவரும் என மத்திய வெளியுறவுத் துறையில் அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது, 'இலங்கையில் அதிபரை பதவி விலக கோரி மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர் இது தீவிரமடைந்து உள்ளது இதனை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளும் இந்தியா செய்யும் விரைவில் அங்கு நிலையான ஆட்சி அமையும்' என்றார்.

மேலும் பேசிய அவர், 'கேரள தங்க கடத்தல் வழக்கு விசாரணை முடிவில் உண்மை நிச்சயம் வெளிவரும் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரசு அமீரக தூதரத்துடன் நடந்த இந்த வழக்கு தொடர்பான விபரங்கள் அனைத்தும் மத்திய வெளிவருவத் துறைக்கு கிடைத்துள்ளது, இதில் நடக்க கூடாத சில நம்பவங்களும் நடந்துள்ளது கோர்ட் வழக்கு நிகழ்வில் உள்ளதால் அது குறித்து கூடுதலாக பேச விரும்பவில்லை' என கூறினார் அமைச்சர் ஜெய்சங்கர். 


Source - Maalai Malar

Similar News