தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா.. அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்கிறார்.!
தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா.. அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்கிறார்.!
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகம் வரஇருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்டமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு சென்னை வருகிறார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் பாஜக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டமன்ற தேர்தலுக்கான நாட்கள் குறைவாக உள்ள காரணத்தினால், ஒரு சில நாட்களில் தொகுதி உடன்பாடு எட்டப்படும் என்று தெரிகிறது. இதற்கான பேச்சு வார்த்தையை இரவு மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் கலந்து ஆலோசனை நடத்துவார்கள்.
இதன் பின்னர் நாளை அதிமுக சார்பில் விழுப்புரத்தில் மிக பிரமாண்டமான முறையில் மாநாடு நடத்தப்படுகிறது. அதில் அமித்ஷா கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.