கோயில்களை பக்தர்களிடமே விட்டுவிட வேண்டும்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு.!

சுற்றுலா வளர்ச்சியின் அடையாளமாக இருந்த கேரளா, ஊழலில் சிக்கி தவிக்கிறது.

Update: 2021-03-24 11:43 GMT

கோயில் பிரச்னைகளில் அரசு தலையிடக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனால் அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் கேரள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து சாத்தனூரில் பரப்புரையில் ஈடுபட்டார்.




 


அப்போது அங்கு அவர் பேசியதாவது: சுற்றுலா வளர்ச்சியின் அடையாளமாக இருந்த கேரளா, ஊழலில் சிக்கி தவிக்கிறது.

தொடர்ந்து அவர் பேசும்போது, கோயில் பற்றிய பிரச்னைகளில் அரசு தலையிடக்கூடாது என்று பாஜக உள்ளது. எனவே கோயில்களை பக்தர்களிடமே விட்டுவிட வேண்டும் என கூறினார். இதே போன்று தமிழகத்திலும் கோயில்களை அரசு நிர்வகித்து வருகிறது. எனவே தமிழகத்தில் உள்ள கோயில்களையும் பக்தர்களிடமே விட்டுவிடுவது நல்லது.




 


அப்போதுதான் கோயில் அமைந்துள்ள பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொள்ள முடியும். வருமானத்தை அரசு எடுத்து செல்வதால் கோயிலை சரிவர பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Similar News