'அமலாக்கத் துறைக்கு ஒழுங்கா பதில் சொல்லுங்க அப்புறம் பிரதமரை விமர்சிக்கலாம்' - ராகுலுக்கு, அனுராக் தாக்கூர் அறிவுரை
'முதலில் அமலாக்கத் துறைக்கு சரியாக பதில் கூறுங்கள்' என ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சாடியுள்ளார்.
'முதலில் அமலாக்கத் துறைக்கு சரியாக பதில் கூறுங்கள்' என ராகுல் காந்தியை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சாடியுள்ளார்.
பிரதமர் மோடியின் 10 லட்சம் பேரை பணியில் சேர்க்கும் நடவடிக்கை அறிவிப்புக்கு பிறகு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், 'எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 2 கோடி வேலை வாய்ப்பு என இளைஞர்களை ஏமாற்றி தற்போது 10 லட்சம் அரசு வேலைகள் என கூறப்பட்டிருக்கிறது' என விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ராகுல் காந்தியின் அந்த விமர்சனத்திற்கு பதில் விமர்சனம் செய்திருக்கிறார்.
இதுகுறித்து கூறிய அனுராக் தாக்கூர் கூறியதாவது, 'பிரதமர் மோடிக்கு நன்றி இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். நாட்டில் இளைஞர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால் ராகுல் காந்திக்கு ஏன் இவ்வளவு கோபம்? வகையில் உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத் துறைக்கு சரியான பதிலைக் கூற நீங்கள் கூற வேண்டும். இதுபோன்ற முடிவை வரவேற்ற அதற்கு பதிலாக பிரச்சினைகளைக் கையாள்வதில் அவர் மிகவும் பிஸியாக இருப்பதாக நான் நினைக்கிறேன்' என ராகுல் காந்தியை அனுராக் தாக்கூர் விமர்சித்திருந்தார்.