உ.பி சட்டசபை தேர்தல்: 221 இடங்களுடன் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: வெளியானது கருத்து கணிப்பு!
உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2022) தேர்தல் நடைபெறுகிறது. இங்கு மொத்தம் 403 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2022) தேர்தல் நடைபெறுகிறது. இங்கு மொத்தம் 403 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வாக்காளர்கள் என்ன மாதிரியான மனநிலையில் உள்ளனர் என்று ஏ.பி.பி நியூஸ் மற்றும் சி வோட்டர் சார்பில் கருத்து கணிக்கு எடுக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பாஜக 41.4 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சி அமைத்தது.
இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கணிப்பின்படி பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 213 முதல் 221 இடங்களை பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது. பாஜக மீது யாருக்கும் எந்தவிதமான அதிருப்தியும் இல்லாத நிலையே உருவாகியுள்ளது. மேலும், அகிலேஷ் யாதவ் தலைமையிலான கூட்டணி சுமார் 152 முதல் 160 தொகுதிகளை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மாயவதி தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய சரிவை சந்திக்கிறது. மிஞ்சிபோனால் அந்த கட்சி 16 முதல் 20 இடங்களை பிடித்தாலே பெரிய விஷயாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் சொல்லப்போனால் 6 முதல் 10 இடங்களை வெற்றி பெறுவது குதிரை கொம்பாக அமையும் என்று கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.
Source: Maalaimalar
Image Courtesy:The Washington. Post