ஹேக் செய்யப்பட்ட உத்திர பிரதேச முதலமைச்சர் ட்விட்டர் கணக்கு!

Update: 2022-04-09 02:08 GMT

உலக அளவில் தொடர்ச்சியாக இணையதளங்களை முடக்கம் செய்யப்படும் சம்பவம் அரங்கேறி வருகிறது. அதே போன்று இந்தியாவிலும் மிகவும் முக்கிய அரசு துறைகளின் இணையதளங்களை சில ஹேக்கர்கள் முடக்கி வரும் செய்திகள் வெளிவருகிறது.

இந்தியாவை பொறுத்த மட்டில் பல்வேறு மாநில அரசுகள் அதிகாரப்பூர்வமாக முதலமைச்சர்களுக்கு என்று ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டு, அதில் அரசு சார்புடைய தகவல்கள் பதிவிடப்படும். இதனால் பொதுமக்கள் எளிதில் திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்வார்கள்.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநில முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு உள்ளது. சிஎம்ஆபிஸ்உபி என்ற அந்த ட்விட்டர் கணக்கை 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பின்பற்றுவதாக கூறப்படுகிறது. ஹேக் செய்யப்பட்ட பின்னர் பல ட்விட்டர் கணக்குகளை டேக் செய்து மர்ம நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Maalaimalar

Image Courtesy: India Blooms

Tags:    

Similar News