தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது என மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. மிக குறுகிய கால இடைவெளியில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால் அரசியல் கட்சிகள் தற்போதில் இருந்து கூட்டணி பேச்சுவார்த்தை இடபங்கீடு உள்ளிட்டவைகளை விரைவாக நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று முதல் தொடங்க உள்ளது. அதன்படி மாநகராட்சி மணடல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்தல் நடைபெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Source: Maalaimalar
Image Courtesy: The Indian Express