நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2021 விருப்பமனு நிறைவு! பொன்.இராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறுவதையொட்டி அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வந்தது. உள்ளாட்சியில் போட்டியிடும் நபர்கள் விருப்பமனுகளை வாங்கி வந்தனர். அதே போன்று பாஜக சார்பிலும் விருப்பமனு அளிகப்பட்டு வந்தது.

Update: 2021-12-01 02:18 GMT

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறுவதையொட்டி அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வந்தது. உள்ளாட்சியில் போட்டியிடும் நபர்கள் விருப்பமனுகளை வாங்கி வந்தனர். அதே போன்று பாஜக சார்பிலும் விருப்பமனு அளிகப்பட்டு வந்தது.


இந்நிலையில், முன்னாள் மத்திய இணை அமைச்சரும், உள்ளாட்சி தேர்தல் மாநில குழு தலைவருமான பொன்.இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு பெறும் நிகழ்ச்சி நவம்பர் 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை அறிவிக்கப்பெற்று மழை காரணமாக மேலும் நீட்டித்து 30ம் தேதி வரை மனு பெறப்பட்டது.

அனைத்து மாவட்டங்களிலும், ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்வத்தோடு விருப்பமனுக்கள் அளித்தது பாராட்டும்படி அமைந்ததுடன் நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. விருப்பமனு பெரும் காலம் 30.11.2021ல் நிறைவு பெற்றுவிட்டதால் புதிய மனுவை யாருக்கும் அளிக்கவோ, ஏற்கனவே அளித்த மனுவை திரும்ப பெறவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். மாவட்ட ரீதியாக அனுப்பப்பட்டுள்ள படிவங்கள், மனு செய்தவர்களின் விவரங்கள் (விருப்பமனுக்கள்) வார்டுகள் வாரியாக பெறப்பட்ட மனுவின் விரவங்களை மாநில தலைமை அலுவலகத்தில் இருந்து எப்2டில் கோரப்பட்டுள்ளபடி டிசம்பர் 2ம் தேதி காலை 10 மணிக்குள் தொகுத்து வழங்கவும், மண்டல்களில் பயன்படுத்தாத எப்1, ஏ,பி,சி படிவங்களை திரும்பப் பெற்று மாவட்ட அலுவலகத்தில் பத்திரப்படுத்தவும், திரும்பப் பெற்ற படிவ விவரங்களை மாநிலத்திற்கும், எனது வாட்ஸ் 98681 44684 எண்ணுக்கும் அனுப்பவும், தேர்தல் பணிகள் குறித்து அடுத்தகட்ட விவரங்கள் தங்களுக்கு விரைவில் தெரிவிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Twiter

Image Courtesy: Chennaivision

Tags:    

Similar News