தி.மு.க.விடம் இருந்து போலீசாரை காப்பாற்ற ராணுவத்தை அழைக்க வேண்டும்!

Update: 2022-02-21 01:00 GMT

சென்னை மாநகராட்சி தேர்தலில் அதிகளவு கள்ள வாக்குகள் போடப்பட்டுள்ளதாகவும், திமுகவிடம் இருந்து தமிழக போலீசாரை காப்பாற்ற ராணுவத்தை அழைக்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பான தகவலை கூறியுள்ளார்.

சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: சென்னையில் பல வார்டுகளில் திமுகவினர் கள்ள வாக்குளை பதிவு செய்துள்ளனர். அவர்கள் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தின் காரணமாக சென்னை உட்பட பல இடங்களில் வாக்குச்சாவடியில் அத்துமீறி நுழைந்து கள்ள வாக்குகளை போட்டனர். இது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது ஆகும். சென்னை மற்றும் கோவையில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதை போலீசார் தடுக்கவில்லை. போலீசாரை வைத்துக்கொண்டு பணத்தை வழங்கியுள்ளனர். அதிமுக பல இடங்களில் தவறுகளை சுட்டிக்காட்டியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், சென்னை, திருவல்லிக்கேணி 114வது வார்டில் திமுகவினர் கள்ள வாக்கு போட்டனர். இது பற்றிய வீடியோவை படம் பிடித்து பொதுமக்கள் வெளியிட்டுள்ளனர். இதனை எல்லாம் ஆதாரமாக நாங்கள் வைத்துள்ளோம். திமுகவினர் அதிகாரிகளை மிரட்டி உங்களை வேறு இடத்திற்கு மாற்றி விடுவோம் என அராஜகத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் திமுகவினர் பல இடங்களில் போலீசாரை மிரட்டி வருகின்றனர். போலீசாரை காப்பாற்ற வேண்டும் என்றால் ராணுவத்தை வரவழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: The New Indian Express

Tags:    

Similar News