உத்தரகண்டில் வரலாறு படைத்த பா.ஜ.க.!
உத்தரகண்ட் மாநிலத்தில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளது. அங்கு கடந்த மாதம் 14ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆம்தி கட்சிகள் போட்டியிட்டது.
உத்தரகண்ட் மாநிலத்தில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளது. அங்கு கடந்த மாதம் 14ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆம்தி கட்சிகள் போட்டியிட்டது.
இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. வாக்கு எண்ணத் தொடங்கிய நிலையில் பாஜகவே முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்து வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி பாஜக 42 இடங்களில் முன்னிலை வகித்தது. காங்கிரஸ் 24 இடங்களிலும் மற்ற கட்சிகள் தலா 4 இடங்களிலும் முன்னிலை வகித்தது.
இதனிடையே உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. சுமார் 21 ஆண்டுகால உத்தரகண்ட் வரலாற்றில் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சியில் அமர்கிறது.