மத்திய அரசு தமிழகத்திற்கு தடுப்பூசியில் குறையே வைப்பதில்லை - குஷியில் மா.சுப்பிரமணியன் !
நவம்பர் மாதத்திற்கு 1.40 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என பெருமை பொங்க கூறியுள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
கஸ்தூரிபாய் நகர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "மத்திய அரசினைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன்படி செப்டம்பர் மாதத்தில் 1.04 கோடி கோவிட் தடுப்பூசிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினால் மேலும் அந்த மாதத்தில் 43 லட்சம் கோவிட் தடுப்பூசிகளை கூடுதலாக வழங்கியது.
இதேபோன்று அக்டோபர் மாதத்தில் 1.22 கோடி ஒதுக்கீடு செய்தது அந்த தடுப்பூசிகளையும் நம்முடைய அரசு முழுமையாக பயன்படுத்தியதால் கூடுதலாக 3 லட்சம் தடுப்பூசிகள் அக்டோபர் மாதத்தில் வழங்கப்பட்டது.
இவ்வாறு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் மத்திய அரசு ஒதுக்கிய தடுப்பூசிகளை முழுவதும் சிறப்பாக பயன்படுத்தி செயல்பட்ட காரணத்திற்காகவும், நவம்பர் மாதத்தில் 1.40 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது" என கூறினார்.