"நான் நக்சல் ஆகியிருப்பேன்"-வைகோ மகன் பேச்சால் அதிர்ச்சி !

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தில் மதிமுக பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு துரை வையாபுரி பேசியதாவது: எந்த ஒரு மொழிக்கும் திராவிடம் எதிரானது கிடையாது. திராவிடம் குறித்து சிலர் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.

Update: 2021-08-03 06:29 GMT

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யங்களை பார்த்த போது, நக்சல் ஆகிவிடலாம் என்ற எண்ணம் தனக்கு ஏற்பட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மகன் துரை வையாபுரி பேச்சால் பரபரப்பு  பேச்சு.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தில் மதிமுக பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு வைகோ மகன் துரை வையாபுரி பேசியதாவது: எந்த ஒரு மொழிக்கும் திராவிடம் எதிரானது கிடையாது. திராவிடம் குறித்து சிலர் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். 


மேலும், நான் 35 வயதில் தொழில் செய்து கொண்டிருந்தேன். அப்போதைய காலக்கட்டத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்ச, லாவண்யம் தலைவிரித்து ஆடியது. இதனால் எனக்கு கோபம் அதிகமானது. அப்போது தான் யோசிச்சதில், 45 வயதுக்கு மேல் குழந்தைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, நக்சல் ஆகும் என்ற எண்ணம் தனக்கு தோன்றியது. இவ்வாறு அவர் பேசினார்.

இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்சியை சேர்ந்த தந்தையின் மகனாக இருந்துக்கொண்டு நக்சல் ஆகிவிடுவேன் என்று கூறியது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துரை வையாபுரிக்கு தற்போது 48 வயது நிறைவடைகிறது. அவரது 35 வயதில் தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. திமுக ஆட்சியைதான் தற்போது விமர்சனம் செய்திருக்கிறார்  என்ற பேச்சு எழுந்துள்ளது. தற்போது திமுக கூட்டணியில் மதிமுக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Dinamalar

Image Courtesy: Dinamalar

https://www.dinamalar.com/news_detail.asp?id=2815513

Tags:    

Similar News