தவறான குற்றச்சாட்டில் பா.ஜ.க.வினர் கைது.. தேர்தல் பறக்கும்படை அதிகாரியை நீக்க வானதி சீனிவாசன் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்!

அவர்களுடைய காசோலை புத்தகங்கள், கிரெடிட், டெபிட் கார்டுகள், கார்களை பறிமுதல் செய்திருப்பதும் அதிகாரி துஷ்பிரயோகத்தையே காட்டுகிறது.;

Update: 2021-04-04 05:04 GMT

பாஜக தேசிய மகளர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதியின் பாஜக வேட்பாளருமான வானதி சீனிவாசன் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வணக்கம், கோவை தெற்கு தொகுதியில் பணம் கொடுக்க முயற்சித்ததாக 12 பாஜகவினர் கைது எனவும் 6 கார்கள், பணம், செக்புக், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று (02.04.2021) பிற்பகல் சுமார் 2.15க்கு கைது செய்யப்பட்டு பிறகு நள்ளிரவு 12.30 வரை கோவை வி.எச். சாலை காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.


கைது செய்யப்பட்ட 12 நபர்களும் தெற்கு தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து அவர்களது சொந்த கார்களில் வந்துள்ளனர். மதிய உணர்விற்கு பிறகு சிறிது ஓய்வெடுக்க அந்த பள்ளி மைதானத்தில் ஒதுங்கியிருந்தனர். இந்த நேரத்தில் பறக்கும்படை அதிகாரி திருமதி ஸ்வர்ணலதா 8056397604, அணி எண் 3 தலைமையிலான குழுவினர் கார்களை ஆராய்ச்சி செய்ததில் ஆட்சேபனைக்குரிய பொருட்களோ, பணமோ கிடைக்கவில்லை. பிறகு அவர்களுடைய பர்ஸ்களிலிருந்த பணம், அவர்களுக்கு சொந்தமான டெபிட், கிரெடிட் கார்டுகள், செக் புத்தகங்களை பறிமுதல் செய்துள்ளார்.


சம்பந்தப்பட்ட பறக்கும்படை அதிகாரியின் செயல் சட்ட மீரலானது. அதிகார துஷ்பிரயேகம் செய்து பொய்யான, ஜோடிக்கப்பட்ட வழக்கை தாக்கல் செய்துள்ளார். அவருடைய செயல், எதிர்கட்சி ஆதரவாளராக இருப்பாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 12 நபர்கள் ரூ.46000 வைத்துக் கொள்வதற்கு சட்டப்படியே இடமிருக்கையில் இந்தத் தொகையை பறிமுதல் செய்து, பொய்யான வழக்கை பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

அவர்களுடைய காசோலை புத்தகங்கள், கிரெடிட், டெபிட் கார்டுகள், கார்களை பறிமுதல் செய்திருப்பதும் அதிகாரி துஷ்பிரயோகத்தையே காட்டுகிறது.




கார்களையும், தேர்தல் பிரச்சார பொருட்களையும் பறிமுதல் செய்து வைத்திருப்பதும் எனது தேர்தல் பிரச்சாரத்தை தடுக்க முயற்சிப்பதாகவே உள்ளது. பணம் பட்டுவாடா முயற்சி செய்ய முயற்சித்ததாக எந்த முகாந்திரமும் இல்லாமல் வழக்கு பதிவு செய்து, எனது பெயருக்கு களக்கத்தை ஏற்படுத்தி, தனது பதவியையும், அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்திய பறக்குபடை அதிகாரி திருமதி ஸ்வர்ணலதா 8056367604, அணி எண் 3 என்பவர் உடனடியாக தேர்தல் பணியிலிருந்து விளக்கி வைக்கப்படுவதுடன், அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News