நான் வெற்றிபெற்ற உடன் வலிமை அப்டேட் கண்டிப்பாக கிடைக்கும்.. வானதி சீனிவாசன் ட்விட்.!
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய மகளிரணித்தலைவர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அத்தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வானதி சீனிவாசனிடம் கோயம்புத்தூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் வலிமை அப்டேட் எப்ப? என ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்த வானதி சீனிவாசன், "நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு இளைஞர் ட்விட்டரில் கேட்ட கேள்விக்கு உடனடியாக பதில் அளித்த வானதி சீனிவாசனுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றால் கண்டிப்பாக மக்களின் பிரச்சனையை உடனடியாக கேட்டு அதற்கான தீர்வுகளை எடுப்பார் என்பது மாற்றுக்கருத்தில்லை. வரும் தேர்தலில் அவர் கோவை தெற்கு தொகுதியில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் பாஜகவினர் கருத்து தெரிவித்துள்ளனர்.