"யாரை வேணாலும் கூப்பிடு" - போதையில் பெட்ரோல் பங்க் மீது காரை ஏத்திய சிறுத்தை குட்டி ஆவேசம்
குடிபோதையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பிரமுகர் பெட்ரோல் பங்க் மீது காரை மோதி, பின் மருத்துவமனையில் அலப்பறை செய்த சம்பவம் காரைக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞரணி செயலாளராக மோகன் ராஜ் என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் மிகுந்த குடிபோதையில் தீபாவளியன்று தனது காரை ஓட்டிவந்து அங்கு உள்ள ஒரு பெட்ரோல் பங்க் மீது மோதியுள்ளார். அன்று விடுமுறை என்பதால் நல்லவிதமாக விபத்துகள் ஏற்படவில்லை.
அதன்பிறகு விடுதலை சிறுத்தைகள் மோகன்ராஜும் அவருடன் காரில் வந்தவர்களும் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அவர்களைப் பரிசோதித்த அங்கிருந்த செவிலியர், வெளிக்காயம் இல்லை, உள்காயம் ஆக இருக்க வாய்ப்புள்ளதால் காரைக்குடி அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். பின்னர் போலீசாரும் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் "நீங்க யாரை வேணும்னாலும் கூப்டுங்க நான் வி.சி.க நிர்வாகி" என தனது அரசியல் பெருமை பேசி அங்குள்ளவர்களை வெறுப்படைய செய்தார். இறுதியில் போலீசார் மற்றவர்களுக்கு தொல்லை ஏற்படாமல் இருக்க அவரின் இன்னல்களை பொறுத்துக்கொண்டனர்.
பின்னர் பெட்ரோல் பங்க் உரிமையாளர் புகார் அளித்த விவகாரம் தெரிந்தவுடன் சிறுத்தைகுட்டி மோகன்ராஜ் தலைமறைவானார், தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.