பெண்களை வைத்து ரூ.5 கோடி மதிப்புள்ள பங்களா அபகரிப்பு ! வி.சி.க. பிரமுகர் அதிரடி கைது!
லண்டனில் வசித்து வந்த பெண்ணின் பங்களாவை அபகரித்து வந்ததாக விசிக பிரமுகர் அப்புன் என்பவரை வில்லிவாக்கம் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
லண்டனில் வசித்து வந்த பெண்ணின் பங்களாவை அபகரித்து வந்ததாக விசிக பிரமுகர் அப்புன் என்பவரை வில்லிவாக்கம் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
லண்டனில் வசித்து வந்த வெளிநாட்டு வாழ் தம்பதிகளான பசுபதி, மங்களேஸ்வரி. இவர்கள் சென்னையை பூர்விடமாக கொண்டதனால், வில்லிவாக்கம் என்.ஆர்.கார்டன் பகுதியில் 1982ம் ஆண்டு பங்களா வீடு ஒன்றை கட்டியுள்ளனர். இந்த வீடு மங்களேஸ்வரி பெயரில் உள்ளது.
அதன் பின்னர் கடந்த 2013ம் ஆண்டு தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகள் பெயரில் வீட்டை பதிவு செய்துள்ளார் மங்களேஸ்வரி சில மாதங்களில் இறந்துள்ளார்.
இதனால் மங்களேஸ்வரியின் கணவர் பசுபதி மட்டும் தனியாக சென்னையில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். பசுபதியின் மகள் சித்ராதேவி வெளிநாட்டில் வசிப்பதால் தன்னுடைய தந்தையை கவனிக்க முடியாமல் அவதியுற்று வந்துள்ளார்.
இதனால் தனது தந்தையை பார்த்துக்கொள்வதற்கு வீட்டில் தங்கி பார்த்துக்கொள்வதற்காக செய்திதாளில் விளம்பரம் கொடுத்துள்ளார். அப்போது அதனை பார்த்து கொளத்தூர் பகுதியை சேர்ந்த அம்பிகா 50, என்ற பெண் மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.
இந்நிலையில், பசுபதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் வீட்டில் இருந்தே கவனித்துக்கொள்வதற்கு தன்னிடம் செவிலியர் இருப்பதால் பணிப்பெண் அம்பிகா சித்ரா தேவியிடம் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அரக்கோணம் பகுதியை சேர்ந்த செவிலியர் சிநேகா என்ற பெண்ணை பணியில் சேர்த்துள்ளார். அப்போது சில மாதங்களில் பசுபதியிடம் செவிலியர் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். இதனால் பணிப்பெண் இது பற்றி அறிந்து சித்ராதேவியிடம் கூறியுள்ளார். இதனால் சிநேகாவை வேலையில் இருந்து நிறுத்தியுள்ளனர்.