பரங்கியரை பதறவைத்த பாளையக்காரர்: வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளில் அண்ணாமலை புகழாரம்!

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் வீரபாண்டிய கட்டபொம்மனின் பங்கு மகத்தானது. பாஞ்சாலங் குறிச்சியை ஆட்சி செய்த கட்ட பொம்மன், ஆங்கிலேய அரசின் வரி வசூலுக்கு எதிராக கர்ஜித்தார்.;

Update: 2021-10-16 11:52 GMT

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் வீரபாண்டிய கட்டபொம்மனின் பங்கு மகத்தானது. பாஞ்சாலங் குறிச்சியை ஆட்சி செய்த கட்ட பொம்மன், ஆங்கிலேய அரசின் வரி வசூலுக்கு எதிராக கர்ஜித்தார். அவர்களுக்கு அடிபணியாமல் சிம்மசொப்பனமாக விளங்கினார். இறுதியில் சூழ்ச்சி செய்து கட்டபொம்மனை கைது செய்த ஆங்கிலேயர்கள், அவரை கயத்தாறில் கொண்டு சென்று தூக்கிலிட்டனர். இவரது வீரம் பூமி உள்ளவரை போற்றப்படும்.



இந்நிலையில், இவரது 222வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். இது பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

உறங்கிக் கிடந்த வீரத்தை உசுப்பி விட்டு, பரங்கியரை பதற வைத்த பாளையக்காரர்!

தூக்குமேடையை கண்டு துவண்டுவிடாது,

தாக்குதலால் ஆங்கிலேயரை தவிக்க வைத்தவர்!

துரோகத்தால் வீழ்த்தப்பட்டு தியாகத்தால் வாழ்ந்து கொண்டிருக்கும் கட்டபொம்மனார் வீரத்தை நினைவு நாளில் வணங்குகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Bjp Tn President Twiter

Tags:    

Similar News