குடும்பத்திற்கு ரூ.2.63 லட்சம் கடன் வருவதற்கு தி.மு.க.தான் காரணம்!

ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.63 லட்சம் கடன் வருவதற்கு திமுகதான் காரணம் என பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2021-08-13 12:42 GMT

ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.63 லட்சம் கடன் வருவதற்கு திமுகதான் காரணம் என பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் குற்றம்சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இது பற்றி அவர் கூறியதாவது: பாஜக நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் சமமாகவே பார்க்கிறது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இடையே நம்பிக்கையை பெற்று வருகிறது.

மேலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஜனநாயக வரம்பை மீறி நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது. அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.

தற்போது தமிழகத்தில் முஸ்லிம்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத சக்திகள் தவறான வழியில் நடத்தி செல்கின்றது. திமுக பட்ஜெட் தாக்கலில் மாதம் ரூ.1,000, நீட் தேர்வு ரத்து போன்ற வாக்குறுதிகள் இடம்பெறவில்லை. அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2.63 லட்சம் கடன் இருப்பதற்கு 90 சதவீதம் காரணம் திமுகதான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: Dinamalar

Image Courtesy: Dinamalar

https://www.dinamalar.com/news_detail.asp?id=2822514

Tags:    

Similar News