பல்கலைகழக விவகாரத்தில் பழைய நடைமுறையே பின்பற்றுங்கள்: தி.மு.க.வுக்கு விஜயகாந்த் அட்வைஸ்!

Update: 2022-04-26 13:50 GMT

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் விதமாக திமுக அரசு சட்டமன்றத்தில மசோதா ஒன்றை நிறைவேற்றியது. இதற்கு சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர், சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல்கலைக்கழக விவகாரத்தில் பழைய நடைமுறையே பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: சென்னை பல்கலைகழகம் உள்பட தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து, மாநில அரசுக்கு மாற்றப்படும் சட்டதிருத்த மசோதா சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் துணை வேந்தராக முதலமைச்சரை ஏன் நியமிக்ககூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Full View

சட்டத்தின் படி முன்னாள் முதல்வர்கள் காலத்தில் இருந்தே பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வரும் மரபை தொடர்வதே சிறந்தது. இந்த நடைமுறையை உடனே மாற்றுவது என்பது இலகுவானது அல்ல என்றும், இந்தியா முமுவதும் என்ன நடைமுறை உள்ளதோ, அதே நடைமுறை தமிழகத்திலும் தொடர்ந்தால் அனைவருக்கும் நல்லது. ஏற்கனவே நீட் விவகாரத்தில் இந்தியா முழுவதும் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே முரண்பாடு உள்ளதால் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் மிக பெரிய குழப்பம் நிலவி வருகிறது. அதேபோன்று துணை வேந்தர்களை நியமிக்கும் விவகாரத்திலும் குழப்பமான சூழ்நிலை ஏற்படுத்தாமல் தமிழக அரசு தெளிவான முடிவை எடுக்க வேண்டும்.

ஆளுநருக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே உள்ள அதிகார போட்டியில், மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கவோ, கேள்விக்குறியாக்கவோ கூடாது. மத்திய, மாநில அரசுகள் பரிந்துரை செய்பவர்களை தவிர்த்து, ஊழல் இல்லாத நேர்மையான துணை வேந்தர்களை நியமித்தால் மட்டுமே, பல்கலைக்கழகங்களும், மாணவர்களின் எதிர்காலமும் சிறப்பாக அமையும் என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு. இவ்வாறு அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Facebook

Tags:    

Similar News