"வெளிமாநிலத்தில் கமிஷன் பார்க்க தரமற்ற பொருளை வாங்கிய தி.மு.க"- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Update: 2022-01-11 09:24 GMT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் வழங்குவதாக அறிவித்தது. அதன்படி ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் எதுவும் தரமில்லை என்று பொதுமக்களே குற்றச்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், சேலத்தில் இன்று தமிழக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் திமுக மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். பொங்கல் பரிசு குறித்து ஆதாரங்களுடன் வீடியோவாக காண்பித்தார்.

இதன் பின்னர் அவர் பேசியதாவது: பொங்கல் பரிசு தொகுப்பில் 21 பொருட்கள் வழங்கப்படுவதில்லை. சிலருக்கு 10 இல்லை 15 பொருட்கள் மட்டுமே வழங்குகின்றனர். அதிலும் வெல்லம் தரமானதாகவே இல்லை. மேலும், வெளிமாநிலங்களில் தரமில்லாத பொருட்களை வாங்கி ரேஷன் கடைகளில் விநியோகம் செய்துள்ளனர். இதன் மூலம் கமிஷன் பார்க்க திமுக தயாராகியுள்ளது என்பதனை பொருட்களை வைத்து உறுதி செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Maalaimalar



Tags:    

Similar News