பைப்லைன் போட அம்மன் கோயிலை இடிக்க முயற்சி - களத்தில் இறங்கிய இந்து முன்னணி

தூத்துக்குடி உள்ள கிராமத்தில் பைப் லைன் போடுவதாக கூறி அம்மன் கோயிலை இடிக்க முயற்சி, இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம்.

Update: 2022-10-07 12:05 GMT

தி.மு.க அரசு பதவி ஏற்றதில் இருந்து இந்து கோவில்களில் பல்வேறு அடக்குமுறைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக பல்வேறு கோவில்கள் பராமரிப்பு இன்று கிடைக்கின்றன. நூறு ஆண்டுகளுக்கு முன்னே பழமையான பல்வேறு கோவில்கள் குடமுழுக்கு என்று ஒரு நிகழ்ச்சி நடைபெறாமல் பாலடைந்த நிலையில் தான் தற்போது வரை இருந்து கொண்டிருக்கிறது. பல்வேறு தரப்பு மக்களும் இத்தகைய கோவில்களை அடையாளம் கண்டு குடமுழுக்கு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எடுத்து வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் ஏதாவது ஒரு காரணத்திற்காக 100 ஆண்டுகள் அல்லது 200 ஆண்டுகள் பழமையான கோவில்களை இடிக்கும் முயற்சிகளையும் கையில் எடுத்து வருகிறது.


சாலைகளை அகலப்படுத்துவது அல்லது புதிய ரயில் மெட்ரோ திட்டம் என்ற பல்வேறு திட்டத்தின் கீழ் கோவில்களை இடிக்கும் முயற்சிகளை தொடர்ச்சி கணம் செய்து வருகின்றது..அந்த வகையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் சவலாப்பேரி என்ற கிராமத்தில் பைப் லைன் அமைப்பதாக கூறி அங்குள்ள அம்மன் கோயில் ஒன்றை இடிக்கும் நிகழ்ச்சி நடந்துள்ளது..இந்த அம்மன் கோவில் என்பது அந்த கிராமத்தின் முதன்மை அம்மன் கோவிலாக்கவும் மற்றும் கிராம மக்களின் தெய்வமாகவும் பார்க்கப்படுகிறது.


இங்கு பைப் லைன் போடுவதாக கூறி கோவிலை இடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதை அறிந்த இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இவர்களுடைய போராட்ட அறிவிப்பின் காரணமாக தற்போது கோவில் இடிப்பு தடுக்கப்பட்டு வேறு வழியாக பைப் லைன் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Input & Image courtesy: Twitter Source

Tags:    

Similar News