தி.மு.க. கொடி கம்பம் நட்ட சிறுவன் பலி! பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க ஜெயக்குமார் கோரிக்கை!

விழுப்புரத்தில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-08-23 09:05 GMT

விழுப்புரத்தில் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரத்தில் பொன்குமார் என்பவரின் குடும்ப திருமணத்தில் திமுக அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அப்போது பொன்முடியை வரவேற்பதற்காக விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் திமுகு கொடி கம்பங்கள் நடப்பட்டு வந்தது.

இப்பணியில் ஏகாம்பரம் என்பவரது இளைய மகன் தினேஷ் 13 வயது சிறுவன் கொடி கம்பம் நடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது சிறுவன் நட்டுக்கொண்டிருந்த கொடி கம்பம் மேலே உயர் அழுத்த மின் கம்பியில் உரசியுள்ளது. இதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டான்.

இதனையடுத்து அங்கிருந்த சிலர் அச்சிறுவனை மீட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிறுவன் சிகிச்சை பலினின்றி உயிரிழந்தார். அமைச்சரை வரவேற்க கொடி கம்பம் நட்ட சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தி, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் காட்டுத்தீ போன்று பரவியது.

இந்நிலையில், சிறுவன் உயிரிழப்புக்கு அமைச்சர் பொன்முடி பொறுப்பேற்ற வேண்டும் எனவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Source: News 18

Image Courtesy:Dt Next

https://tamil.news18.com/news/tamil-nadu/villupuram-boy-died-issue-jayakumar-urges-action-on-ponmudi-vjr-541571.html

Tags:    

Similar News