வீட்டில் இருந்ந விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்த போலீசார் !

Breaking News.

Update: 2021-09-04 09:45 GMT

தாம்பரத்தில் வீட்டில் இருந்த விநாயகர் சிலைகளை போலீசார் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், ராஜகோபால் நகர், 3'வது தெருவைச் சேர்ந்தவர் அசோகன் 'தமிழ்நாடு இந்து புரட்சி முன்னணி' என்ற கட்சியின் மாநில பொறுப் பாளரான இவர், தன் வீட்டில் 3 மற்றும் 4 அடி உயரமுள்ள 21 விநாயகர் சிலைகளை வைத்திருந்தார். அந்த சிலைகளை வரும் விநாயகர் சதுர்த்திக்கு முன்பு சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 21 நிர்வாகிகளுக்கு வழங்க கட்சியின் மாநில தலைவர் சந்திரகுமார் முடிவு செய்திருந்தார்.

இதையறிந்த தாம்பரம் போலீசார், தாம்பரம் வருவாய்த் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து நேற்று மாலை அந்த விநாயகர் சிலைகளை அசோகன் வீட்டில் இருந்து அகற்ற முயன்றனர். இதனால் அக்கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் போலீசார் விநாயகர் சிலைகளை எடுத்து தாலுகா அலுவலகம் கொண்டு சென்றனர். இதையடுத்து அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கும் இருதரப்புக்கும் வாக்குவாதம் தொடர்ந்தது.

அக்கட்சியினரின் எதிர்ப்பை மீறி போலீசார் அந்த விநாயகர் சிலைகளை அங்கிருந்து கன்னடபாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு கொண்டு சென்று, அங்குள்ள அறையில் வைத்து பூட்டி 'சீல்' வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விநாயகர் சதுர்த்திக்கு தடை விதித்துள்ள விவகாரம் பெரும் புகைச்சலை கிளப்பிய நிலையில் விநாயகர் சிலைகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

HinduTamil

Tags:    

Similar News