விநாயகரே இல்லாமல் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொன்ன ராகுல் காந்தி - ஹிந்து மத வெறுப்பின் உச்சகட்டம் !

இந்துமத கடவுள்களை இந்திய மக்களிடம் இருந்து பிரிக்கும் காங்கிரஸின் வாழ்நாள் எண்ணம் இதிலிருந்து அப்பட்டமாக தெரிகிறது.

Update: 2021-09-10 06:30 GMT

நேரு குடும்பத்தின் இளவரசர் ராகுல் காந்தி ஹிந்து மத வெறுப்பின் உச்சமாக விநாயகர் படமே இல்லாமல் விநாயகர் சதுர்த்தி வாழ்த்தை கடமைக்கு கூறியது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.




 


இன்று விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஹிந்து சமுதாயத்தில் அனைவராலும் விரும்பப்படகூடிய கடவுளாகவும், இந்தியாவில் அதிகம் ஆலயம் கொண்ட  கடவுளாகாகவும் விநாயகரை வணங்கி வருகிறோம். மேலும் இன்றைய தினத்தில் புதிதாக முயற்சிகள் துவங்கினால் அது துலங்கும் எனவும், புதிதாக தொழில் துவங்கினால் அது மாபெரும் வெற்றி பெறும் என்பதும் ஐதீகம். இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் அம்பானி குடும்பத்தார் கூட தனது குழுமங்களில் புதிய தொழில்கள் துவங்கினால் விநாயகர் சதுர்த்தி அன்றுதான் துவங்குவர், இன்றைக்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருக்கக்கூடிய 'ஜியோ' கூட விநாயகர் சதுர்த்தி அன்று துவங்கப்பட்டதுதான். இப்படியாக விநாயகர் சதுர்த்தியை புனித வளமைமிகு நாளாக இந்துசமுதாய மக்கள் கொண்டாடி வரும் வேளையில் வழக்கம்போல் இந்துக்களை அவமதிக்கும் காங்கிரஸ் கட்சி தலைமை இன்றைக்கும் தன் ஹிந்து வெறுப்பை உமிழ்ந்துள்ளது.

அதன்படி இன்று நேரு குடும்பத்தின் இளவரசரும், இந்தாலியை பிறப்பிடமாக கொண்ட சோனியாவின் புதல்வரும், காங்கிரஸின் வாழ்நாள் பிரதமர் வேட்பாளருமாகிய ராகுல் காந்தி விநாயகர் இல்லாத விநாயகர் சதுர்த்தி வாழ்த்தை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்துமத கடவுள்களை இந்திய மக்களிடம் இருந்து பிரிக்கும் காங்கிரஸின் வாழ்நாள் எண்ணம் இதிலிருந்து அப்பட்டமாக தெரிகிறது.

Tags:    

Similar News