கொரோனாவில் இருந்து பாதுகாக்க.. வாக்காளர்களுக்கு கையுறை.. தேர்தல் அதிகாரி தகவல்.!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 12ம் தேதி தொடங்குகிறது. அதே போன்று 19ம் தேதி வேட்புமனுதாக்கலுக்கு கடைசி நாளாகும்.

Update: 2021-03-08 12:48 GMT

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 12ம் தேதி தொடங்குகிறது. அதே போன்று 19ம் தேதி வேட்புமனுதாக்கலுக்கு கடைசி நாளாகும்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அதிமுக, திமுக கூட்டணி கட்சியினர் தீவிரமாக களத்தில் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.


 



இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: தமிழகத்தில் சட்டசபை தேர்தலை அமைதியாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.


 



தமிழகம் முழுவதும் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வேட்பு மனுதாக்கல் 12ம் தேதி முதல் தொடங்குகிறது. சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வேட்பு மனுதாக்கல் செய்ய முடியாது. மற்ற நாட்களில் மனு தாக்கல் செய்யலாம். மேலும், கொரோனா தொற்று காரணமாக வாக்காளர்கள் அனைவருக்கும் கையுறை வழங்கப்படும். இதனால் வாக்காளர்கள் அச்சம் இன்றி வாக்களிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News