முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு அடையாள அட்டை: அஞ்சல் மூலம் அனுப்பும் பணி தொடக்கம்.!
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு அடையாள அட்டை அஞ்சல் மூலம் அனுப்பும் பணியினை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான வே.விஷ்ணு துவக்கி வைத்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு அடையாள அட்டை அஞ்சல் மூலம் அனுப்பும் பணியினை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான வே.விஷ்ணு துவக்கி வைத்தார்.
நெல்லை மாவட்டத்தில் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு அஞ்சல் மூலம் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான வே.விஷ்ணு துவக்கி வைத்தார்.
தேர்தல் ஆணையம் மூலம் பெறப்பட்ட 45,128 வாக்காளர் அடையாள அட்டையினை தபால் துறையினரிடம் வழங்கினார். இதனையடுத்து தபால்துறை ஊழியர்கள் அட்டையை பெற்றுக்கொண்டனர்.
இந்த விழாவின்போது சார் ஆட்சியர்கள் சிவகிருஷ்ணமூர்த்தி சேரன்மகாதேவி பிரதீக்தயாள், துணை ஆட்சியர் (பயிற்சி) மகாலட்சுமி மற்றும் தபால் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.