சிகிச்சைக்கு ஸ்டாலின் லண்டன் பயணமா? கவலையில் உடன்பிறப்புகள்.!

சிகிச்சைக்கு ஸ்டாலின் லண்டன் பயணமா? கவலையில் உடன்பிறப்புகள்.!

Update: 2020-12-11 15:30 GMT

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிவாரண பொருட்கள் வழங்கினார்.

அப்போது அவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது இதனால் மயக்கமடைந்த அவர் உடனே அருகில் இருந்த தனியார் மருத்துமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து பரிசோதனைக்காக போரூர் எஸ்.ஆர்.எம் மருத்துவமனை சென்ற அவர் அங்கிருந்து பரிசோதனை முடிந்து வீடுதிரும்பியுள்ளார், அவருடன், துரைமுருகன்,  டி.ஆர் பாலு, சபரீசன் மற்றும் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

அதீத அலைச்சல் காரணமாக ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டு இருக்கலாம் எனவும், அவர் ஓய்வெடுக்க டாக்டர்கள்  அறிவுறுத்தினார்கள் என்றும் இதுதொடர்பாக ஸ்டாலின் தரப்பில் கூறப்பட்டது.

ஸ்டாலின் அவர்களுக்கு வயது 70, என்னதான் அவர் சைக்கிளிங் செல்வது, உடற்பயிற்சி செய்வது, பிரயாணம் செய்வது என விளம்பரத்திற்காக அவரை தி.மு.க'வின் விளம்பர அமைப்பு உபயோகபடுத்தினாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர் உடல் இல்லை என ஸ்டாலினின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் மேல் சிகிச்சைக்காக லண்டன் பயணமாகலாம் எனவும் தகவல்கள் வருகின்றன. 

உடல்நிலையை பார்த்துக்கொள்ளுங்கள் ஸ்டாலின் அவர்களே பதவி பிறகு என ஸ்டாலின் நலன்விரும்பிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

Similar News