"பிரதமரை திரும்பி போ என சொன்னவர்கள் நாங்கள்" - கனிமொழியின் திமிர் பேச்சு!

"பிரதமரை திரும்பி போ என சொன்னவர்கள் நாங்கள்" - கனிமொழியின் திமிர் பேச்சு!

Update: 2021-01-26 11:22 GMT

"பிரதமரை திரும்பி போ என்று சொன்னவர்கள் நாங்கள்" என கனிமொழி திமிராக பேசியுள்ளார்.

கடந்த இரு தினங்களாக சிவகங்கை மாவட்டத்தில் தி.மு.க மகளிர் அணித்தலைவி கனிமொழி "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்" என்ற தி.மு.க'வின் தேர்தல் தேர்தல் பரப்புரையை  மேற்கொண்டு வந்தார்.

இதனை தொடர்ந்து திருப்புவனத்தில் தி.மு.க மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அவர், கூறியதாவது, "இந்தி தான் இந்தியாவின் முதன்மை மொழி என்றால் நாம் யார்? இடம் தர குடிமக்களாக வாழ என்ன அவசியம் இருக்கிறது? என கேள்வி எழுப்பினார். தமிழர்களின் அடையாளங்களை, பண்பாட்டை, மொழியை தொட்டு பார்க்க நினைத்தால் மறுபடியும் போராட்டம் வெடிக்கும்" என எச்சரித்தார்.

மேலும் பேசிய அவர் கூறியதாவது, "மொழி போரை நடத்தி காட்டியவர்கள் நாங்கள். பிரதமரை திரும்பி போ என்று சொன்னவர்கள் நாங்கள். விரைவில் எங்கள் பாதுகாப்பு இல்லாமல் நீங்கள் நடக்க முடியாது" என அ.தி.மு.க தலைவர்களை எச்சரித்தார். 

"பிரதமரை திரும்ப போ என நாங்கள் எச்சரித்தவர்கள்" என கனிமொழி திமிராக பிரச்சாரம் செய்தது மக்கள் மத்தியில் தி.மு.க'வின் திமிர் முகத்தை காட்டுவதாக இருந்தது.

Similar News