ரஜினியின் ஆன்மீக அரசியலை முன்னெடுத்து தி.மு.க.வை தோற்கடிப்போம்.. அர்ஜுன் சம்பத்.!

ரஜினியின் ஆன்மீக அரசியலை முன்னெடுத்து தி.மு.க.வை தோற்கடிப்போம்.. அர்ஜுன் சம்பத்.!

Update: 2020-12-30 12:02 GMT

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் ஆன்மீக அரசியலை முன்னெடுத்து திமுகவை தோற்கடிப்போம் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இந்து மக்கள் கட்சி சார்பில் பொள்ளாச்சியில் வேல் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வேல் வழிபாடு செய்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்: ரஜினியின் முடிவை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது. ரஜினி அரசியல் கட்சி துவங்கும் அறிவிப்பு திமுகவை தோற்கடிக்கதான் என்றும் அதற்காகதான் ரஜினி, கமல் போன்றவர்களை அரசியல் கட்சிகள் துவங்க வைக்கிறார்கள் என்றும் ஸ்டாலின் வெளிப்படையாகவே பேசியிருந்தார் என சாடினார்.

மேலும், ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்தால் அவரது வாக்குகள் பிஜேபிக்கு சென்றால் அதிமுக தோல்வியடையும் என்று நினைத்தார்கள். திராவிட அரசியலின் மோசமான நிலைமையை மக்கள் மனதில் ரஜினி பதிய வைத்துள்ளார். 

அவரது கொள்கைகளை முன்னிறுத்தி திமுகவை தோற்கடிப்போம். 234 தொகுதிகளில் அவர் ஆசியோடு ஆன்மீக அரசியலை முன்னெடுத்து திராவிட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்றார்.
 

Similar News