தி,மு.க வெற்றிபெற உழைத்தோம், இப்படி எங்களை புலம்ப வைத்துவிட்டாரே முதல்வர் - ஜாக்டோ-ஜியோ'வின் விசும்பல்

'ஆட்சி மாற்றத்துக்கு உழைத்த எங்களை கண்டுகொள்ளவில்லை' என ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.

Update: 2022-08-08 13:13 GMT

'ஆட்சி மாற்றத்துக்கு உழைத்த எங்களை கண்டுகொள்ளவில்லை' என ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது, மாநில தலைவர் அன்பரசன் தலைமையில் சங்கம் முழுவதும் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் செல்வம், 'கடந்த தேர்தலின் போது ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர்.

ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என கடுமையாக நாங்கள் உழைத்தோம் ஆனால் தேர்தல் வாக்குறுதியாக கூறப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆட்சி பொறுப்பேற்று ஒன்றை ஆண்டுகளாகியும் இதுவரை தி,மு.க அரசு நிறைவேற்றவில்லை இது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்புள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்ற அரசை திமுக அரசை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்ததை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் பெறப்பட்டுள்ளது' எனக் கூறினார்.


Source - News 7 Tamil

Similar News