வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்துவது சாத்தியமில்லை.. நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்.!
இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து தேர்தல்களையும் முறையாகத்தான் நடத்தி வருகிறது. ஆனால் திமுக போன்ற எதிர்க்கட்சிகள் வேண்டும் என்றே ஆணையத்தின் மீது சந்தேக பார்வையுடன் பார்க்கிறது.
தமிழகத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் பார்த்து வருகிறது.
இதனிடையே தமிழகத்தில் தேர்தல் முறையாக நடைபெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், வாக்குச்சாவடிகளில் மோசடி நடைபெறாமல் இருப்பதற்கு வெப்கேமரா பொருத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்துவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து தேர்தல்களையும் முறையாகத்தான் நடத்தி வருகிறது. ஆனால் திமுக போன்ற எதிர்க்கட்சிகள் வேண்டும் என்றே ஆணையத்தின் மீது சந்தேக பார்வையுடன் பார்க்கிறது.