மம்தா முதலமைச்சராக நீடிப்பாரா ? பவானிபூர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

மேற்கு வங்காள மாநிலத்தில், பவானிபூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் பாஜக சார்பில் பிரியங்கா டிப்ரிவால் போட்டியிட்டனர்.

Update: 2021-10-03 05:28 GMT

மேற்கு வங்காள மாநிலத்தில், பவானிபூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் பாஜக சார்பில் பிரியங்கா டிப்ரிவால் போட்டியிட்டனர். 

இந்த தேர்தலின் வாக்குப்பதி கடந்த செப்டம்பர் 30ம் தேதி நடைபெற்றது. இதில் 57 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. கடந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளை விட குறைவான வாக்குகளே பதிவாகியிருந்தது.

இந்நிலையில், பவானிபூர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 3) காலை தொடங்கியது. வாக்கு எண்ணும் மையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே முதலமைச்சர் பதவியில் மம்தா பானர்ஜி நீடிக்க முடியும். தற்போது யார் வெற்றி பெறுவார்கள் என்று மதியம் தெரிந்து விடும்.

Source: Maalaimalar

Image Courtesy: ANI

Tags:    

Similar News