மம்தா பானர்ஜி தேறுவாரா? பவானிப்பூர் இடைத்தேர்தலில் இன்று வாக்குப்பதிவு!
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் இன்று (செப்டம்பர் 30) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் இன்று (செப்டம்பர் 30) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு மத்திய ஆயுதப் போலீஸ் படையின் 20 கம்பெனிகள் அத்தொகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றிய போதும், தாம் போட்டியிட நந்திகிராம் தொகுதியில் படுதோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அமோக வெற்றி பெற்றார்.
இதனிடையே ஆறு மாதத்திற்குள் எம்.எல்.ஏ.வாக தேர்வாக வேண்டும் என்பதால், இந்த தேர்தலில் வெற்றியை நோக்கி மம்தா பானர்ஜி காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் பாஜக வேட்பாளர் பிரியங்கா திபிரிவால் மிகவும் வலுவாக இருப்பதால் இந்த முறையும் மம்தா பானர்ஜி தோல்வியை தழுவ வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த முறையும் தேறுவது கடினமாகவே உள்ளது.
Source, Image Courtesy: Polimer