மேற்கு வங்காள தேர்தல்: 20 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.!

மேற்கு வங்க மாநிலத்தில் 294 சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. அம்மாநிலத்தில் வருகின்ற 27ம் தேதி முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Update: 2021-03-04 07:05 GMT

மேற்கு வங்க மாநிலத்தில் 294 சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. அம்மாநிலத்தில் வருகின்ற 27ம் தேதி முதல் ஏப்ரல் 29ம் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மம்தா பானர்ஜி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. மீண்டும் 3வது முறையாக ஆட்சியை பிடிக்க மம்தா தீவிரம் காட்டி வருகிறார்.


 



இதனிடையே வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை கைப்பற்ற பல்வேறு வகையில் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் பாஜக தேசிய தலைவர், மற்றும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தீவிரமான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்காக "மிஷன் மேற்கு வங்காளம்" என்ற பெயரில் அங்கு ஆட்சியை வெல்லும் நோக்கத்தில் பாஜக மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.


 



இந்நிலையில், பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் மோடி மேற்கு வங்காளத்தில் 20 பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகின்ற 7ம் தேதி முதல் அவரது பிரசாரம் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

அதே போன்று தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் பொதுக்கூட்டங்களிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

Similar News