தூத்துக்குடி மக்களுக்கு என்ன செஞ்சீங்க.. வாங்க ஒரே மேடையில் விவாதிக்கலாம்.. கனிமொழிக்கு சவால் விட்ட அமைச்சர்.!

தூத்துக்குடி மக்களுக்கு என்ன செஞ்சீங்க.. வாங்க ஒரே மேடையில் விவாதிக்கலாம்.. கனிமொழிக்கு சவால் விட்ட அமைச்சர்.!

Update: 2021-01-24 17:33 GMT

தூத்துக்குடி மீனவர்கள் பிரச்சனையானாலும் சரி பொதுமக்களின் பிரச்சனையானாலும் சரி முதல் ஆளாக குரல் கொடுப்பது அ.தி.மு.க.தான் என அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. அந்த பந்தயத்தை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனிடையே வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு அளித்தார். இதன் பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசுகையில், மீனவர்களின் வாழ்வாதாரம் பற்றி எந்தப் பிரச்சனை வந்தாலும் முதல் ஆளாக குரல் கொடுப்பது அ.தி.மு.க. அரசுதான்.

மேலும், ராமேஸ்வரம் மீனவர்கள் இறந்தது துரதிருஷ்டவசமான சம்பவம் இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது பற்றி தமிழக முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசி வருவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு, கனிமொழி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் அவர் என்ன செய்துள்ளார் என கேள்வி எழுப்பினார்.

கோவில்பட்டி எம்.எல்.ஏ.வாக தேர்வாகி பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கியுள்ளேன். ஆனால் கனிமொழி எம்.பி. இரண்டு வருடங்களில் கோவில்பட்டி பகுதிக்கு என்ன திட்டங்களை கொண்டு வந்தார் என்று ஒரே மேடையில் விவாதிக்க தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Similar News