வன்னியர் சமுதாயத்துக்கு பா.ம.க என்ன செய்தது? ராமதாஸை சீண்டும் ஸ்டாலின்

வன்னியர் சமுதாயத்துக்கு பா.ம.க என்ன செய்தது? ராமதாஸை சீண்டும் ஸ்டாலின்

Update: 2021-01-29 07:24 GMT

வன்னியர் சமுதாயத்திற்கு தி.மு.க செய்த சாதனைகளை மறைத்து பொய்யாக பிரசாரம் செய்கிறார் ராமதாஸ் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

கடலூர் மேற்கு மாவட்டம், நெய்வேலி'யில் நடைபெற்ற தி.மு.க பிரச்சார விழாவில் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியதாவது, "வன்னியர் சமுதாயம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 20 சதவீத இடஒதுக்கீடும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டது. இடஒதுக்கீடு கேட்டுப் போராடி உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும், உதவித் தொகையைும் அளித்தது தி.மு.க ஆட்சி.

தமிழ்நாட்டில் முதன்முதலில் டி.ஜி.பி.யாக ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்த கட்சி தி.மு.க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்த ஆட்சி தி.மு.க.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமித்த ஆட்சி தி.மு.க.

ஆனால், ராமதாஸ் சொந்த ஆதாயத்திற்காகவும், சுய நலத்திற்காகவும் தி.மு.க வன்னியர் சமுதாயத்திற்குச் செய்த சாதனைகளை மறைத்து பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார்" என குற்றம் சாட்டினார். 

ஏற்கனவே பா.ம.க தி.மு.க கூட்டணியில் இடம் பெறும் என செய்திகள் உலாவி வந்த நிலையில் வன்னியர் சமுதாயத்தின் வாக்குகளை பெற பா.ம.க'வை குற்றம் சுமத்தும் நிலைக்கு தி.மு.க வந்துள்ளதை பார்க்கும் போது. வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ம.க தி.மு.க'வுடன் கூட்டணியில் இல்லை என்பது தெளிவாகிறது. மேலும் தேர்தலை கருத்தில் கொண்டு பா.ம.க'வின் வாக்கு வங்கியான வன்னியர் சமுதாய ஓட்டுக்களை ஸ்டாலின் குறிவைத்து பேசியிருப்பது  பா.ம.க தலைமையையும், தொண்டர்களையும் சூடேற்றியுள்ளது.

Similar News