பிரதமருடன் ஆளுநர் மாளிகையில் பேசியது என்ன? - அண்ணாமலை விளக்கம்

பிரதமர் மோடியுடன் நேற்றைய சந்திப்பில் அரசியல் பேசவில்லை என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விளக்கம் கொடுத்துள்ளார்.

Update: 2022-07-29 13:15 GMT

பிரதமர் மோடியுடன் நேற்றைய சந்திப்பில் அரசியல் பேசவில்லை என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விளக்கம் கொடுத்துள்ளார்.

செஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்காக துவக்க விழா போட்டிகளை துவக்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்திருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் அடுத்தபடியாக கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.

ஆளுநர் மாளிகையில் பா.ஜ.க நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். முக்கிய நிகழ்வுகள் குறித்து ஆலோசனைக்கப்பட்ட நிலையில் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது அவர் கூறியதாவது, 'கட்சியின் மூத்த நிர்வாகிகள், பழைய நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் தேர்தல் போன்ற அரசியல் நிகழ்வுகள் எதுவும் இல்லை என்பதால் பிரதமர் மோடியுடன் நாங்கள் அரசியல் பேசவில்லை. பா.ஜ.க எப்போதும் கொள்கை ரீதியாக செல்லும் கட்சி, பா.ஜ.க ஒருபோதும் கொள்கையை மாற்றிக் கொள்ளாது செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்கள் தொடர்பாக மதுரை ஹைகோர்ட் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது.

மிகச் சரியான தீர்ப்பு அது நேற்று மாலை முதலே தமிழக அரசு தனது தவறை சரி செய்ய தொடங்கியிருக்கிறது, விளம்பரங்களில் நேற்று முதலே பிரதமர் படும் இடம்பெற்று இருந்தது! ஆளுங்கட்சி தானாக செய்ய வேண்டும் என நாங்கள் எதிர்பார்த்தோம்.

மேலும் 5000 ஆண்டுகால கலாச்சாரம் இந்த நிகழ்ச்சியில் பிரதிபலித்தது, இதற்காக தமிழக முதல்வருக்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன். நிகழ்ச்சியை பாராட்டுவதால் கூட்டணி என அர்த்தம் ஆகாது' என அண்ணாமலை தெரிவித்தார்.


Source - Maalai Malar

Similar News