முதல்வர் ஸ்டாலினை கூப்பிடாமல் என்ன தமிழ் சங்கம நிகழ்ச்சி - தி.மு.க விசுவாசத்தை குபீரென காட்டிய காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ்

'தமிழக முதல்வரை ஸ்டாலினை அழைக்காமல் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்' என பீட்டர் அல்போன்ஸ் கொதித்துள்ளார்.

Update: 2022-11-28 02:02 GMT

'தமிழக முதல்வரை ஸ்டாலினை அழைக்காமல் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்' என பீட்டர் அல்போன்ஸ் கொதித்துள்ளார்.

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவரும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி'யுமான பீட்டர் அல்போன்ஸ் ஈரோட்டில் சந்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது. 'காசியில் தமிழ் சங்கமம் என்ற பெயரில் மத்திய அரசு விழா நடத்துகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. சிறுபான்மையினரும் அந்த விழாவில் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றனர்.

தமிழர்களை சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க முயல்கிறது இதனை வன்மையாக கண்டிக்கிறேன். கிறித்தவர்களும், இஸ்லாமியர்களும் தமிழர்களுக்காக பல்வேறு இலக்கியங்களை உருவாக்கியுள்ளார்கள், அவர்களை புறக்கணிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்' என கூறினார்.

மேலும் பேசிய அவர், 'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை நீதிமன்ற உத்தரவு அதை எதிர்க்கவில்லை. அதே சமயத்தில் தீவிரவாதிகளை ஹீரோ போல் வரவேற்பதை நாங்கள் ஏற்கவில்லை' எனக் குறிப்பிட்டார்.


Source - Junior Vikatan

Similar News