எங்க அப்பா எம்.ஜி.ஆர். மாதிரி படுத்துக்கொண்டே ஜெயிப்பார்.. விஜயகாந்த் மகன் பரபரப்பு பேட்டி.!
எங்க அப்பா எம்.ஜி.ஆர். மாதிரி படுத்துக்கொண்டே ஜெயிப்பார்.. விஜயகாந்த் மகன் பரபரப்பு பேட்டி.!
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சி மக்கள் நலக்கூட்டணியை ஆரம்பித்து தேர்தலை சந்தித்து. அந்த கூட்டணி படுதோல்வியை சந்தித்து.
இந்நிலையில், தேமுதிக நிறுவனரும் நடிகருமான விஜயகாந்தின் மகனுமான விஜயபிரபாகரனிடம் உங்கள் தந்தை பேசுவாரா? அவர் பிரச்சாரம் செய்ய முடியுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது விஜயபிரபாகரன் அளித்துள்ள பதில், கேப்டன் பேசணும்.. எழுந்து நடக்கணும் அவசியம் இல்லை. அமெரிக்காவில் இருந்து கொண்டே எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றதை போன்று கேப்டனும் படுத்துக்கொண்டே ஜெயிப்பார்.
மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக 3வது அணி அமைத்து தேர்தலை சந்திக்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூட்டணி குறித்து அதிமுக காலம் கடக்காமல் எங்களுடன் கூட்டணி பேச வேண்டும் என சமீபத்தில் பேட்டியில் தெரிவித்தார்.
தற்போது விஜயகாந்த் மகன் 3வது அணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவோம் என்று கூறியுள்ளார். இவர்களின் பேச்சு எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியாமல் அக்கட்சி தொண்டர்கள் திண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.