கமலா ஹாரிஸின் தங்கை மகள் மீனா ஹாரிஸிற்கு எச்சரிக்கை விடுத்த வெள்ளை மாளிகை அதிகாரிகள்! பின்னணி என்ன?
கமலா ஹாரிஸின் தங்கை மகள் மீனா ஹாரிஸிற்கு எச்சரிக்கை விடுத்த வெள்ளை மாளிகை அதிகாரிகள்! பின்னணி என்ன?
அமெரிக்காவில் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியின் உறவினர்கள் அவர்கள் பெயரை பயன்படுத்தி தங்கள் சொந்த நிறுவனங்களை, பிராண்டுகளை உயர்த்தப் பார்ப்பது வெள்ளை மாளிகையின் விதிமுறைகளுக்கு எதிரானது. தற்போதைய ஜனாதிபதி ஜோ பிடென் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸிற்கும் இது பொருந்தும்.
இந்நிலையில் இந்திய விவகாரங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து கருத்துக்கள் கூறி வரும் கமலா ஹாரிஸின் தங்கை மகள் மீனா ஹாரிஸ், இந்நெறிமுறைகளை கடைபிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் தங்கை மகள் மீனா ஹாரிஸ் நீண்டகாலமாக தனது சொந்த பிராண்டை உயர்த்துவதற்காக கமலா ஹாரிஸின் புகழைப் பயன்படுத்தினார். ஆனால் இப்போது கமலாஹாரிஸ் வெள்ளை மாளிகையில் நுழைந்ததால், இப்படி விளம்பரம் செய்வதின் நெறிமுறை தாக்கங்கள் குறித்து கவலை எழுந்துள்ளதாக நியூயார்க் போஸ்டின் ஒரு அறிக்கை கூறுகிறது.
வெள்ளை மாளிகையின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி, மீனா ஹாரிஸ் பற்றி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸிடம் கூறுகையில், சில விஷயங்களை செய்து விட்டால் பிறகு அதன் விளைவுகளை தவிர்க்க முடியாது என்கிறார்.
"நடத்தை மாற வேண்டும்," என்றும் மீனா ஹாரிஸ் பற்றி கூறினார், புதிதாக உருவாக்கப்பட்ட பிடன்-ஹாரிஸ் வெள்ளை மாளிகையில் மீனாவின் முயற்சிகள் ஒரு முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
மீனா ஹாரிஸ் ஒரு வழக்கறிஞராக மாறிய தொழிலதிபர் ஆவார், அவர் இன்ஸ்டாகிராமில் 800,000 க்கும் அதிகமான பாலோயர்ஸ் கொண்டுள்ளார். அங்கு அவரது பதிவுகள் அரசியல் முதல் தனிப்பட்டவை வரை பலவிதமாக உள்ளன.
"கமலா மற்றும் மாயாவின் பெரிய யோசனை" என்ற தலைப்பில் ஒரு குழந்தைகளின் புத்தகத்தை எழுதியவர் மீனா. மேலும் அவர் "நிகழ்வு" (Event) என்றழைக்கப்படும் பெண்களின் ஆடை பிராண்டின் நிறுவனர் ஆவார்.