சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆதாரம் கேட்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது: ராகுலை வறுத்தெடுத்த அசாம் முதலமைச்சர்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு அம்மாநில பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கலந்து கொண்டு பேசியதாவது:
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆதாரம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். நீங்கள் ராஜீவ் காந்தியின் மகனா, இல்லையா என்பதற்கு நாங்கள் எப்போதாவது ஆதாரம் கேட்டுள்ளோமா?
மேலும், மறைந்த ஜெனரல் பிபின் ராவத் தலைமையில் பாகிஸ்தானில் இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. நாங்கள்தான் தாக்குதல் நடத்தினோம் என ராணுவம் தெரிவித்தது. ஆனால் ஆதாரம் கொடுங்கள் என கேட்பதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. ராணுவ தலைமை தளபதியை நீங்கள் நம்பவில்லை என்ற கேள்வியையும் எழுப்பினார்.
Source: Maalaimalar
Image Courtesy: Orissa Post