மதுரை மீனாட்சியம்மன் பக்தர்கள் மீது தி.மு.க.விற்கு திடீர் பாசம் ஏன்? இந்துக்கள் ஓட்டுக்காக போஸ்டர் ஒட்டும் கொடுமை.!
மதுரை மீனாட்சியம்மன் பக்தர்கள் மீது தி.மு.க.விற்கு திடீர் பாசம் ஏன்? இந்துக்கள் ஓட்டுக்காக போஸ்டர் ஒட்டும் கொடுமை.!;
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மதுரையில் திமுக நிர்வாகி ஒருவர் இந்துக்களின் ஓட்டுக்களை கவருவதற்காக போஸ்டர் அச்சடித்து ஒட்டியுள்ள சம்பவம் மக்களிடையே முகம் சுளிக்க வைத்துள்ளது.
சமீபத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் மாநிலம் முழுவதும் சென்று வேல் யாத்திரை நடத்தினார். இந்துக்களின் கொள்கைகளை எடுத்து கூறினார். இதனால் இந்துக்களிடையே எழுச்சியை பெற்றது.
இந்நிலையில், கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட திமுக, திக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வேல் யாத்திரை குறித்து விமர்சனம் செய்து வந்தனர். இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தைப்பூசத் திருநாளுக்கு அரசு விடுமுறை அறிவித்தார். அதனையும் திமுகவினர் விமர்சனம் செய்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினே திருத்தணி பொதுக்கூட்டத்தில் கையில் வேலுடன் நின்றார்.
இந்த சம்பவத்தை பார்த்த இந்துக்கள் அனைவரும் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தலுக்கு முன்புவரை இந்து கடவுளை விமர்சனம் செய்துவிட்டு தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் கையில் வேல் எடுத்து பிடித்து கொண்டீர்களா என பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். ஸ்டாலினுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது. எங்கே இந்துக்கள் ஓட்டுக்கள் விழாமல் போய்விடுமோ என்ற காரணத்தினால்தான் வேலை பிடித்துக்கொண்டார் என அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், மதுரையில் மீனாட்சியம்மன் பக்தர்கள் மீது திமுகவிற்கு திடீர் பாசம் ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக், திரையரங்கு கட்டுப்பாடு நீங்கியது, மீனாட்சி கோயில் செல்லும் பக்தர்களுக்கு மட்டும் கட்டுப்பாடா என கேள்வி எழுப்பி திமுக நிர்வாகி ஒருவர் போஸ்டர் அச்சடித்து ஒட்டியுள்ளார். தேர்தல் நெருங்குதால் பக்தர்கள் ஓட்டு பெற திமுக முயற்சிப்பதாகவும், அது நடக்காது எனவும் மதுரையில் உள்ள இந்துக்கள் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.